மாண்புமிகு துணை முதலமைச்சர் அவர்களால் 2017-2018 –ம் ஆண்டு நிதித்துறை மானியக்கோரிக்கையின்போது சட்டப்பேரவையில் அறிவிப்பு செய்யப்பட்டதன் அடிப்படையில் தேசிய தகவலியல் மையம், சென்னையின் மூலமாக ஓய்வூதியர்கள் தரவுதளம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் பெற்றவிபரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்துப்பெறல், உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப்பயன்கள் வங்கியில் வரவுவைக்கப்பட்டது போன்ற விபரங்களை கருவூலங்களை அணுகாமலே இத்தரவுதளத்தில் பெறலாம். மேலும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அகவிலைப்படி மற்றும் இதரபயன்களை அறிந்து கொள்ளலாம். மேலும் ஓய்வூதியர் வாழ்நாள்சான்று அளித்தவிபரம், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விபரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முண்பணம், புதிய மருத்துவகாப்பீடு திட்டம் மற்றும் குடும்பநலநிதி பிடித்தங்கள் போன்ற விபரங்களை தங்களது ஓய்வூதியகொடுவை எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய இயலும்.